"நான் எப்பவும் இந்தியான்டா" மாலத்தீவுகளில் எடுக்கப்பட்ட விடியோவை டெலீட் செய்த தமிழ் ட்ரக்கர்.!
நான் எப்பவும் இந்தியான்டா மாலத்தீவுகளில் எடுக்கப்பட்ட விடியோவை டெலீட் செய்த தமிழ் ட்ரக்கர்.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை, மாலத்தீவுகள் நாட்டின் எம்.பி விமர்சனம் செய்து ட்விட் பதிவு செய்திருந்தார்.
இது இந்தியா - மாலத்தீவு உறவினை கடுமையாக பாதித்து, இணையத்தில் வார்தைப்போர் கடுமையான அளவு முற்றியது. இதனால் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மாலத்தீவு சுற்றுப்பயணத்தை தவிர்த்து வருகிறது.
ஒட்டுமொத்த நாட்டு வருவாயில் 70% வருவாய் சுற்றுலாவை மட்டுமே வைத்து நம்பி இருக்கும் மாலத்தீவுக்கு, இந்தியர்களின் முடிவு பேரதிர்ச்சியை தந்தது.
இந்நிலையில், உலகளாவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு வீடியோ பதிவு செய்யும் Tamil Trekker, மாலத்தீவுகளில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் அதனை விளம்பரப்படுத்தும் விடீயோக்களை தான் நீக்கம் செய்யபோகவதாக தெரிவித்து இருக்கிறார்.
மாலத்தீவுகளில் அவர் எடுத்த விடீயோவின் வாயிலாக கிடைக்கும் வருவாயை தவிர்க்க, மாலத்தீவை புறக்கணிக்கவும் அவர் பலருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். நமது நாடுகளில் உள்ள பல இடங்களை நாம் சுற்றிப்பார்ப்போம் எனவும் கூறியுள்ளார்.