கஷ்டத்துடன் வெளிநாட்டு வாழ்க்கை... ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தமிழர்.! அதிர்ஷ்டத்தால் உச்சகட்ட மகிழ்ச்சி.!
கஷ்டத்துடன் வெளிநாட்டு வாழ்க்கை... ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தமிழர்.! அதிர்ஷ்டத்தால் உச்சகட்ட மகிழ்ச்சி.!
கேரள மாநிலத்தை சேர்ந்த முஜீப் சிராதோடி என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியை தனது 9 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நிலையில் அவர்களுக்கு அதில் Dh12 மில்லியன் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.
இந்த பரிசு பணத்தை 10 பேரும் பிரித்து எடுத்து கொள்ளவுள்ளனர். அதன்படி ஒருவருக்கு 2.5 கோடி அளவுக்கு பணம் கிடைக்கும். இதுகுறித்து முஜீப் கூறுகையில், நான் என் வாழ்நாளில் கோடீஸ்வரன் ஆவேன் என்று நினைத்ததேயில்லை. எனக்கு கடன்கள் அதிகமாக உள்ளது, எனது கடன்களை அடைத்துவிட்டு சொந்த ஊரில் சொந்த வீடு கட்ட போகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பிக் டிக்கெட்டில் இரண்டாவது பரிசான 2 கோடியை தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் என்ற தமிழர் தட்டி சென்றுள்ளார். விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை ஏப்ரல் 26ஆம் தேதி வாங்கியுள்ளார். அவருக்கு 2 கோடி பரிசு விழுந்த நிலையில் அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.