பொங்கலுக்கு புத்தாடைகளை வழங்கிய முதல்வர்; ஒன்றரை கோடி பேர் பயனடைவர் என தகவல்.!
tamilar festival - pongal pandigai - vasti, shirt gift
பொங்கல் திருநாளை முன்னிட்டு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வேஷ்டி, சேலைகளை முதல்வர் வழங்கினார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் 1983 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம்தான் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கும் திட்டம்.
இதன் முக்கிய நோக்கம் நலிந்து வரும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்து அழிந்து வரும் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திடவும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அமைந்த இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு, 2019-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று 5 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எம்.மணியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.