இன்று முதல் பொங்கல் பரிசுடன் ரூ.1000; களைகட்ட தொடங்கிய பொங்கல்.!
tamilar thirunal festival prize and 1000 rupees
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.
தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் முதல் நாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். தாங்கள் செய்யும் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் வருணபகவான் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசினால் ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு பொங்கல் பொருட்கள் இலவசமாக பொங்கல் பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.258 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசனை வெளியானது. அதன்படி ரூ.53.61 கோடி சர்கரைக்கும், ரூ.80.76 கோடி கரும்பிற்கும், ரூ. 30.29 கோடி முந்திரி மற்றும் திராட்சைக்கும், ரூ.60.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியானது.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. பரிசு தொகுப்புக்காக 258 கோடியும் பரிசு தொகைக்காக 1980 கோடியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி இந்த பொங்கல் பரிசு மற்றும் தொகையினை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.