"இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கிடைக்க மோடி தான் காரணம்." தமிழிசை மகிழ்ச்சி.!
இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கிடைக்க மோடி தான் காரணம். தமிழிசை மகிழ்ச்சி.!
தமிழகத்தில் பெண்களின் வங்கி கணக்கில் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்படும் திட்டம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்து இருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் திமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அந்தத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வங்கி கணக்கில் இல்லத்தரசிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ள இதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்து இருக்கிறார்.
இது பற்றி அவர், "இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதற்கு பாரதப் பிரதமர் மோடி தான் காரணம். அனைவருக்கும் வங்கி கணக்கு எனும் திட்டத்தை கொண்டு வந்தது மோடி தான். இதன் மூலம் அனைவரும் வங்கி கணக்கு ஏற்படுத்தி பயனடைந்து வருகின்றனர். வரிசையில் நின்று மானியம் பெறுவதும், கமிஷன் தரக்கூடிய நிலையும் இதனால்தான் மாறி இருக்கிறது. இதற்கு பெயர்தான் டிஜிட்டல் இந்தியா."என்று தெரிவித்து இருக்கிறார்.