திராவிட மாடல் அரசின் மீது நம்பிக்கை இல்லை - தமிழிசை ஆவேசம்.!
திராவிட மாடல் அரசின் மீது நம்பிக்கை இல்லை - தமிழிசை ஆவேசம்.!
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு காவல்துறை ஞானசேகரன் என்ற குற்றவாளியை கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணித்து, விசாரணைக்காக குழுவும் அமைத்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு அரசியல்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
சிபிஐ விசாரணை அவசியம்
இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், "அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை அவசியம். மாநில அரசின் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கிறார்கள். பெண்களுக்கு நீதிகேட்டு நாங்கள் போராடினால், நாங்களும், எங்களைப்போன்று போராட்டம் நடத்தும் நபர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: #Breaking: "யார் அந்த சார்" - ஆர்.எஸ் பாரதி பதிலால் பரபரப்பு.!
நம்பிக்கை இல்லை
ஜனநாயகத்திற்கு எதிரான செயல் இது. அனைத்து கட்சிக்கும் போராட அனுமதி உள்ளது. அடக்குமுறையை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொள்கிறது. அண்ணா நகரில் பாலியல் குற்றச்சாட்டு விஸ்வரூபம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லாமல், நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலை., விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், தலைவர்கள்கள் கைது செய்யப்படுகிறார்கள். திராவிட மாடல் அரசின் மீது நம்பிக்கை இல்லை" என பேசினார்.
இதையும் படிங்க: கோவில் நிலத்தில் வீடு கட்டிய ஞானசேகரன்; வருவாய்த்துறை ஆய்வில் அம்பலம்.!