போராடியவர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்; அதிர்ச்சியில் 2 லட்சம் ஆசிரியர்கள்.!
tamilnadu - jacto jio - government stafs - strike
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விபரங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறையின் இணைய தளத்தில் பதிவிட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து சில நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். இந்த அமைப்பில் பெரும்பான்மையோர் ஆசிரியர் பெருமக்கள் ஆவர்.
இந்நிலையில் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்பன உள்ளிட்ட அரசின் அதிரடி நடவடிக்கையால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர்களின் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழுவினர் மனு அளித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களின் விபரங்கள் குறித்து பள்ளிக்கல்வி துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதுவரை 2 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கையானது ஆசிரியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளதால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.