விதவைப் பெண் மீது ஆசிட் வீச்சு; வாலிபர் தற்கொலை; கனியாகுமரியில் பயங்கரம்!
tamilnadu - kaniakumari - asid veechu - youth death
தன்னை மறுமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த விதவைப் பெண் மீது ஆசிட் ஊற்றி விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ஏர்க்கோடு பகுதியில் வசித்து வருபவர் கிரிஜா(35 ). தனது கணவர் மணிகண்டன் எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில்
தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்போது விதவையாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை வசித்து வரும் ஜான் ரோஸ்( 28 ) கட்டிட தொழிலாளியான இவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரிஜாவை பலமுறை அணுகியுள்ளார். ஆனால் இதற்கு கிரிஜா மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு கூட அவர் மீது கிரிஜா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இரவு கிரிஜா மீது ஜான் ரோஸ் ஆசிட் வீசியுள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கிரிஜா. இந்நிலையில் என்ன செய்வதென்று அறியாது விஷமருந்து அருந்தி தற்கொலை முயற்சி செய்த ஜான் ரோஸ் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு விதவைப் பெண்ணை மறுமணம் செய்ய வற்புறுத்தி தானும் ஆசிட் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.