கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
tamilnadu - metric school - speacl class - holidays
தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் பள்ளிகள் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி கல்வி இயக்குனர் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை மீறும் பள்ளிகளின் தலைமையாசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில்: 2018 - 2019ம் ஆண்டில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் போர்டு பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு நீட், ஐஐடி என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு கோடை காலத்தில் தான் வகுப்புகள் நடைபெறும். இந்த போட்டி தேர்வுகள் மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இந்திய அளவில் நடைபெறும். அதை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
எனவே 2019 ஏப்ரல் 9ம் தேதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பிளஸ் - 1, பிளஸ் - 2 வகுப்பினருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அதேவேளையில் நீட், ஐஐடி உள்ளிட்ட தகுதி தேர்வு, நுழைவுத் தேர்வுகளுக்கு பிளஸ் - 1, பிளஸ் - 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.