கூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்! மாணவர்களின் வளர்ச்சியை தடுக்க வேண்டாம்! தமிழக பாஜக தலைவர்
tamilnadu BJP leader talk about New education policy
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில், “காலங்கள் மாறவில்லையா? கருத்துகள் மாறவில்லையா? மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர்." என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.சி., மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இழக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் யார் மீதும் திணிக்கவில்லை என தெரிந்தும் அரசியல் செய்கிறார்கள்.
செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமைய பாரத பிரதமர் எடுத்துரைத்து வருகிறார். இந்திய மாணவர்களின், இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி, உலக அளவில் அவர்களது மேம்பாட்டுத் திறன், ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும் புதிய கல்விக் கொள்கையை மொழிப்பற்றி மட்டுமே பேசி, தடுத்துவிட வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.