ஒரு கையில் பஸ் ஸ்டியரிங்..! மறு கையில் வாட்ஸ் ஆப் சேட்டிங்..! பேருந்து ஓட்டுநர் செய்த காரியத்தால் பீதியடைந்த பயணிகள்..!
Tamilnadu bus driver using phone while driving
சாலை விதிகளை மதிக்காமல் ஒருசிலர் செய்யும் பெரும் தவறுகளால் பல நேரங்களில் மோசமான விபத்துகள் ஏறுபடுகின்றது. இந்நிலையில் பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறை செல்லும் தனியார் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் ஒரு கையில் ஸ்டேரிங்கும், மற்றொரு கையில் செல்போனில் வாட்சப் பார்த்துக்கொண்டு பேருந்தை வேகமாக இயக்கியுள்ளார்.
ஓட்டுநரின் இந்த மோசமான செயலால் அச்சம் அடைந்த பயணிகள் ஓட்டுநரை கண்டித்துள்ளனர். ஆனால், பயணிகள் கூறுவதையும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் ராமகிருஷ்ணன் கையில் செல்போனை வைத்துக்கொண்டு போஸ்புக், வாட்ஸ்ஆப் பார்த்தபடி பேருந்தை தொடர்ந்து வேகமாக இயக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற தற்போது இந்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது. பயணிகளின் மீது அக்கறை இல்லாமல் இவ்வளவு அஜாக்கிரதையாக பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.