முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா? அவரே வெளியிட்ட வீடியோ!
tamilnadu cm celebrate vinayagar chathurthi
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து, அதற்க்கு பூஜைகள் செய்யப்பட்டு, பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், கண்மாய், ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் அனைவரும் வீட்டிலேயே விநாயகரை வழிபட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலேயே குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். வீட்டில் அவரே முதற்கடவுளான விநாயகருக்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டுள்ளார். அவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய வீடியோவையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.