×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவால் ஏற்படும் நெஞ்சக நோயை கண்டறிய நடமாடும் எக்ஸ்ரே கருவி! முதலமைச்சர் அசத்தல்!

Tamilnadu cm opened xray vehicle

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில் ரூ.5 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கொரோனாவால் எற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் அடையாளமாக நேற்று 5 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அதற்கான பரிசோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திட இயலும்.

பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள், தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Xray #edapadi palanisami
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story