தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் விமான சேவைகளை தொடங்க வேண்டாம்! தமிழக முதல்வர் கோரிக்கை!
tamilnadu government letter to prime minister about flight service
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்காவது கட்டமாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா பரவுவது குறைந்தபாடில்லை. மேலும் நாளுக்கு நாள் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதற்கிடையில் ஊரடங்கால் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மார்ச் 25ஆம் தேதி முதல் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகிற 25-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அனைத்து உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கும் என அத்துறையின் மந்திரி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
மேலும் சென்னையில் இருந்து பெங்களூர், டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.