அந்தரங்க வாழ்க்கைக்கு ஆப்படித்தது தமிழ்நாடு அரசின் அறிவிப்பு.. தின வேலை பயணிகளுக்கு குமுறலோ குமுறல்..!
அந்தரங்க வாழ்க்கைக்கு ஆப்படித்தது தமிழ்நாடு அரசின் அறிவிப்பு.. தின வேலை பயணிகளுக்கு குமுறலோ குமுறல்..!
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. வாரத்தில் 4 நாட்கள் 12 மணிநேர வேலை பின்னர் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டம் இதனால் அமலாகும்.
தமிழகத்தை பொறுத்தமட்டில் பலரும் காலையில் வீடுகளில் இருந்து புறப்பட்டு நெடுந்தூரம் பயணித்து வேலைகளுக்கு சென்று வருகிறார்கள். ஒருசிலர் மட்டுமே தங்கும் இடத்தில் இருந்து எளிதில் தொழிற்சாலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.
அரசின் 12 மணிநேர வேலை திட்டத்தால் வேலைக்கு கிளம்பி சென்று வர 2 மணிநேரம் முதல் 3 மணிநேரம், உறக்கம் 7 மணிநேரம் முதல் 8 மணிநேரம் என வேலை நேரத்தோடு நாளொன்றுக்கு 24 மணிநேரமும் முடிந்துவிடுகிறது.
இதனால் ஒரு நபரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்கை, குழந்தைகள், உறவினர்கள் என அவர்களுடன் இருக்கும் நேரம் ஆகியவையும் பாதிக்கப்படுகிறது. இவை பிற்கால மன ரீதியான அழுத்தத்திற்கு வழிவகை செய்யும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.