ஏழைகளுக்கு இனிய செய்தி அரசு ரூ.2000 வழங்க தடை இல்லை; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
tamilnadu gvt announced - 2000 - high court
கஜா புயல் பாதிப்பு மற்றும் போதிய மழையின்மையால் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் நிதி உதவி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று சமீபத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்திற்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவிக்கான வங்கி சான்றிதழை வழங்கி முதல்வா் பழனிசாமி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நிதி தொடா்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் குடும்பங்களை கண்டறிவதில் தவறு நடந்திருப்பதாகவும், தோ்தல் நோக்கத்திற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தாா்.
இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிறப்பு நிதி பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளது. இதில் எந்தவித குளறுபடியும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.