செவிலியர்கள் அரசு பணியாளராக தேர்வு செய்யப்பட்டால் ரூ.4,000/- ஊதிய உயர்வு; அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!
செவிலியர்கள் அரசு பணியாளராக தேர்வு செய்யப்பட்டால் ரூ.4 ஊதிய உயர்வு; அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!
தமிழ்நாடு முழுவதும் கொரோனா காலத்தில் செவிலியர்கள் அவசர தேவை காரணமாக அன்றைய அதிமுக அரசால் 2020ல் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ பணியில் சேர்க்கப்பட்டனர். கொரோனா பரவலின் போது ஏற்பட்ட செவிலியர்கள் தட்டுப்பாடு அதனால் சரி செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்றதால், அனைவர்க்கும் பணிகள் பிரித்து வழங்கப்பட்டன. தற்போது, திமுக தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்த பணியாளர்களை பணியில் இருந்து நிறுத்துவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்தது.
இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர்கள் மொத்தமாக போராட்டத்தில் களமிறங்கிய நிலையில், உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. முதலில் அரசு திட்டவட்டமாக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய முடியாது என தெரிவித்து இருந்தது. ஆனால், செவிலியர்களின் போராட்டம் தோடர்ந்து வந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு & சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "ஒப்பந்த பணியாளர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் பணி நிறைவுபெற்று, சரியான ஆவணங்களை சமர்பித்தோருக்கு பணி நிரந்தரம் செய்யப்படும். அவர்களுக்கு ரூ.14 ஆயிரம் சம்பளம் கூடுதலாக ரூ.4 ஆயிரம் உயர்த்தப்பட்டு மாதம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்" என தெரிவித்தார்.