தமிழ்நாட்டில் இப்படி ஒரு விபரீத நிலையா?.. அறியாத வயசு, புரியாத மனசு பருவத்திலேயே கர்ப்பம்.! அதிர்ச்சி ரிப்போர்ட்.!
தமிழ்நாட்டில் இப்படி ஒரு விபரீத நிலையா?.. அறியாத வயசு, புரியாத மனசு பருவத்திலேயே கர்ப்பம்.! அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்றளவில் திருமணத்திற்கு முன்னரே காதல், ஏமாற்றம், ஆசை வார்த்தை, வற்புறுத்தல் போன்ற விஷயங்களால் பாதிக்கப்படும் சிறுமிகள், பாலியல் ரீதியான உறவு காரணமாக கர்ப்பமாகும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தகவலின்பேரில் மட்டும் 8742 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 15 மாவட்டங்களில் இளம் பருவத்திலேயே பெண்கள் கர்ப்பமாகும் சூழல் அதிகரித்து இருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3429 பெண்கள் தங்களின் இளம் பருவத்தில் கர்ப்பமாகி இருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் 1057 பெண்களும், வேலூரில் 921 பேரும் கர்ப்பமாகி இருக்கின்றனர். சிவகங்கை, திருச்சி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, தேனி, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் 500 க்கும் கீழ் இளம் கர்ப்பம் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டில் சென்னையில் மட்டும் அறியாத பருவத்தில் 1317 பேர் கர்ப்பமாகி இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், இளைஞர்களுடன் பழகி கர்ப்பமாகும் இளம்பெண்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றன.