ஒரே அறிவிப்பால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
Tamilnadu people appreciated to cm
பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல்மாக அமைக்கப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று சட்ட அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியது.
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவை எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டு இந்த பகுதி தரிசு நிலமாக மாறும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலை மாற, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு, சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தனர்.
அதேபோல் டெல்டா மாவட்டங்களில், தோல் பதனிடும் ஆலைகள், கப்பல் உடைக்கும் ஆலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அந்த தொழில்களை நடத்தினால் 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.