டாஸ்மாக்கில் 90 ML அறிமுகம் செய்ய காரணங்கள் என்னென்ன?.. அமைச்சர் கூறிய அதிரடி விளக்கங்கள் இதோ.!
டாஸ்மாக்கில் 90 ML அறிமுகம் செய்ய காரணங்கள் என்னென்ன?.. அமைச்சர் கூறிய அதிரடி விளக்கங்கள் இதோ.!
தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் அமைப்பு மூலமாக அரசு மதுபானங்களை விநியோகம் செய்து வருகிறது. சமீபத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின்படி தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 180 ml அளவுள்ள சரக்கு பாட்டிலில் இருந்து, 90 ml அளவு கொண்ட பாக்கெட் மூலமாக மதுபானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து அமைச்சர் முத்துசாமி தெரிவிக்கையில், "இப்போதைய அளவு 180 ml இருப்பதிலேயே குறைவு. இதனை ஒருவர் வாங்கி முழுமையாக பயன்படுத்த இயலாது. அவர் வேறொருவருக்காக காத்திருக்கிறார். இதனை ஆய்வுகளின் மூலமாக நாங்கள் கண்டறிந்தோம்.
ஆய்வு முடிவுகளின்படி 40% நபர் அரைமணிநேரம் கடையிலேயே காத்திருக்கிறார். அண்டை மாநிலங்களில் சோதிக்கையில் 90 ml அளவு இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 90 ml குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இவற்றை சட்டப்படி நாம் மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு பயனுள்ளதாக, மக்களுக்கு இருக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என கூறினார்.