தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா... சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்.!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா... சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்.!
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து மக்களை சந்தோஷசத்தில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது மழையின் அளவு படிப்படியாக குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 6 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதிகளில் வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.