இந்த ஆண்டு டிசம்பரிலும் தமிழ் நாட்டிற்கு ஆபத்தா! தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி ரிப்போர்ட்
Tamilnadu weatherman about this year december
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய மிகப்பெரிய பேரழிவு சுனாமி. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பலியாகினர். அந்த ஆண்டு முதல் டிசம்பர் மாதம் என்றாலே தமிழக மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டுவிடுகிறது.
தானே புயல், சென்னை வெள்ளம், வர்தா புயல், ஜெயலலிதா மரணம் என பல அசம்பாவிதங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.
இந்ந ஆண்டு நவம்பர் மாதமே அடத்த கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டிசம்பரிலும் தமிழகத்திற்கு ஒரு அபாயம் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"இன்னும் 7 நாட்களில் பர்மா, ஒரிஸா, ஆந்திரா மாநிலங்களில் வானிலை மாற்றம் நிகழும். ஆனால் டிசம்பர் மாத இறுதியில் தமிழகத்தின் விதி வழக்கம் போல தான் உள்ளது. ஆனால் அது எந்த உருவத்தில் தாக்கப்போகிறது என்பதுதான் கேள்விக்குறி. அது குறைந்த காற்றழுத்தம் ஆகவோ காற்றழுத்த தாழ்வு நிலையாகவோ அல்லது புயலாகவோ தாக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
இதன்மூலம் KTC (காஞ்சி, திருவள்ளூர், சென்னை) பகுதிகளில் அல்லது டெல்டா பகுதிகளில் மழை பெய்யுமா என்பதும் அப்போது தான் தெரியவரும். ஆனால் எப்படியாக இருந்தாலும் சென்னைக்கு இந்த ஆண்டிற்கு தேவையான மழை பொழிய போவதில்லை இந்த ஆண்டிற்கு பற்றாக்குறையாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டிசம்பர் 15ம் தேதி வரை தமிழகத்தின் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறியுள்ளார்.