சுளீர் வெயில், திடீர் மழை! தமிழகத்தின் வானிலை மாற்றம் குறித்து வெதர்மேன் எச்சரிக்கை
Tamilnadu weatherman update about NEM monsoon
தமிழகத்தில் இன்று முதல் இன்னும் சில நாட்களுக்கு சுளீரென வெயிலடிக்கும் போது திடீரென மழை பெய்யும் என்றும் வெளியில் செல்லும் போது எப்போதும் குடையுடன் செல்லுங்கள் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த அக்டோபர் மாதம் துவங்கி அடுத்த 3 மாதங்களுக்கு தமிழகம் நல்ல மழையை பெறப்போகிறது என்று கூறியுள்ளார். 1996ல் இதே போல் வானிலை உருவாகி திடீர் திடீரென 15-20 நிமிடங்கள் மழை பெய்தது. தற்போது இந்த வருடம் அதே நிலை நீடிக்கவுள்ளது.
சென்னை முதல் தூத்துக்குடி வரையிலுள்ள அனைத்து கடலோர மாவட்டங்களில் அடிக்கடி விட்டுவிட்டு நிச்சயம் மழை பெய்யுமாம். சில சமயம் இரவு பெய்ய துவங்கும் மழையானது அடுத்த நாள் விடிய விடிய பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய உள்ளதாம். குண்ணூர், கோடை, ஊட்டி ஆகிய பகுதிகளில் தினமும் மழை பெய்யுமாம்.