இந்த பகுதியில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது..! தமிழக அரசு உத்தரவு..!
Tasmac not reopening in chennai on may 7th
ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நாடுமுழுவதும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் பல மாநிலங்களில் நேற்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பது குறித்து தகவல்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு நிபந்தனைகளுடன் உத்தரவு வழங்கியுள்ளது.
ஆனால், தமிழகத்தில் வைரஸ் அதிகம் பாதிப்புக்கு உள்ளன சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஏழாம் தேதி, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.