கொரோனா அச்சுறுத்தல்: டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறதா? நீதிமன்றம் அதிரடி!
Tasmak will closed for corona?
கொரோனா பரவாமல் தடுக்க சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட 104 நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது.
இதனால் நாடுமுழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடும்படி கூறியுள்ளார்.
சென்னையில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை விநியோகம் செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.