×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

TET தேர்வில் 2% தேர்ச்சி!!.. கேள்விக்குறியாகும் கல்வித்தரம்?!! சமூக ஆர்வலர்கள் கவலை..!!

TET தேர்வில் 2% தேர்ச்சி!!.. கேள்விக்குறியாகும் கல்வித்தரம்?!! சமூக் ஆர்வலர்கள் கவலை..!!

Advertisement

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாளில் இரண்டு விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் முடிவு நேற்று வெளியானது. இந்த தேர்வை 4,01,986 பேர் எழுத பதிவு செய்த நிலையில் 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

1.5 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளது கல்வியின் தரத்தை கேள்விக் குறியாக்கி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Teacher Eligibility Test #TET #Graduate Teachers #TET Exam Result
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story