பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி அரிசி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள் 350-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கொங்கணாபுரம் அருகே உள்ள பச்சாலியூரை சேர்ந்த பழியப்பன் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளிக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஆசிரியர் பழியப்பன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து பழனியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.