ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சி: 38 பேரின் உயிர் நூலிழையில் தப்பியது.!
ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சி: 38 பேரின் உயிர் நூலிழையில் தப்பியது.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த 36 ஐயப்ப பக்தர்கள் குழு, சபரிமலைக்கு புறப்பட்டு பயணம் செய்துள்ளனர். வேனை சுபாஷ் மற்றும் வினோத் ஆகிய இரண்டு ஓட்டுனர்கள் இயக்கி இருக்கின்றனர்.
வேன் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், அட்டைக்குளம் பகுதியில் சென்றபோது முன்பக்க சக்கரம் கழன்று ஓடியுள்ளது. 200 மீட்டர் தூரம் சக்கரம் ஓடி சாலையோரம் விழுந்தது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அட்டைக்குளத்தை நோக்கி பாய்ந்துள்ளது. குளத்தில் நீர் நிரம்பி இருந்த நிலையில், சுதாரித்த ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார்.
இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.