பயங்கர விபத்து.. சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியான சம்பவம்..!
பயங்கர விபத்து.. சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியான சம்பவம்..!
திருப்பத்தூர் மாவட்டம் பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் அருகே கோவை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியும் காரும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட லாரி டிரைவருக்கு த்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.