சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சீல் வைக்க என்ன காரணம்.? அமைச்சர் விளக்கம்.!
Tge reason behind lockdown erode
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மூன்று மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு தொடர உத்தரவிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சீல் வைத்ததில் மக்களுக்கு எந்தவித ஆச்சர்யமும் ஏற்படவில்லை. காரணம் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட முதல் நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மற்றும் அடுத்த நபர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பது தான்.
ஆனால் மூன்றாவது மாவட்டமாக ஈரோட்டை இந்த பட்டியலில் இணைக்க காரணம் என்ன என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. காரணம் கொரோனாவிற்கும் ஈரோட்டிற்கும் சம்பந்தமாக இதுவரை எந்த தகவலும் வெளியாகாததால் தான்.
தற்போது அனைவரின் இந்த சந்தேகங்களுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். தாய்லாந்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர்கள் இருவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.