×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழ்நாடாக மாறிய சிங்கப்பூர்! தைப்பூச திருநாளில், சிங்கப்பூரில் தமிழர்களின் நேர்த்திக்கடன்கள்!

thai poosam festival

Advertisement

தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.

 2020 பிப்ரவரி 8ஆம் தேதி அதாவது தை மாதம் 25ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திரம் பிப்ரவரி 7ஆம் தேதியான நேற்று இரவு 10.55 மணியிலிருந்து தொடங்குகிறது என்பதால் அணைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் பல நாட்கள் விரதமிருந்து நேற்று முதலே நாக்கில் வேல் குத்தி, பால்குடம் எடுக்க தொடங்கினர்.

முருகனின் ஆறுபடை வீடுகளும் தைப்பூச திருவிழாவிற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்க்கடவுள் என்று கொண்டாடப்படும்   முருகப் பெருமானுக்கு எடுக்கப்படும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது தைப்பூசம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

தமிழ்நாட்டில் உள்ளதைப்போலவே தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியால் உள்ள உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமையப்பெற்றுள்ள  மலேசியா பத்துமலை முருகன் கோவிலிலும் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர் முருகன் கோவிலிலும் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரின் ஜுராங் பகுதியில் வாழும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் ஸ்ரீ அருள்மிகு முருகன் கோயில். இங்கு முருகனுடன், சிவன், விநாயகர், காளியம்மன் மற்றும் நவகிரகங்கள் வழிபாட்டுத் தெய்வங்களாக உள்ளன. சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். 

சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். பக்தர்கள் பல நாட்கள் விரதமிருந்து  காவடி எடுப்பார்கள். அங்கு சீனர்கள் பெருந்திரளாக வருகை தந்து தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறை வேற்றுவார்கள். நேற்றய தினம் முதல் சிங்கப்பூரில் தமிழர்கள் காவி உடை அணிந்து முருகனை தரிசித்தனர். சிங்கப்பூர் தமிழகம் போல் காட்சியளித்தது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#singapoure #murugan temple
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story