ரயிலில் மர்ம உறுப்பை காட்டி, அத்து மீறிய போலிஸ்.. அதிர்ந்து போய் வீடியோ எடுத்த பெண்.!
ரயிலில் மர்ம உறுப்பை காட்டி, அத்து மீறிய போலிஸ்.. அதிர்ந்து போய் வீடியோ எடுத்த பெண்.!
சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கபிலா என்ற பெண் பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 14ஆம் தேதி கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.
அப்போது அவருடன் பயணித்த ஒரு ஆண் தனது மர்ம உறுப்பை காட்டி அந்த பெண்ணிடம் ஆபாச சைகை செய்துள்ளார். இதன் காரணமாக, மிகவும் அதிர்ந்த அந்தப் பெண் உடனே தனது செல்போனில் அதை வீடியோ எடுத்துள்ளார். எடுத்த வீடியோவை அந்த நபரிடம் காட்டி சண்டை போட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நான் போலீஸ் என்று கூறிய அந்த நபர் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், பாதியிலேயே ரயிலில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார். அவர் செயலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் ரயில்வே போலீசிடம் புகார் கொடுத்துள்ளார்.
தன்னிடம் இருந்த வீடியோவையும் அவர்களிடம் காண்பித்த நிலையில் ரயில்வே போலீசார் சிசிடிவி ஆதரங்களை கொண்டு விசாரித்ததில் அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வருகின்றார் என்றும் அவரது பெயர் கருணாகரன் என்றும் தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.