20 ஆனியன் தோசை, 10 முட்டை தோசை.. ஆன்லைனில் வந்த ஆர்டர்..! அதன்பின் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..
தஞ்சாவூர் மாவட்டம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள எம்.ஐ.ஜி காலணி பகுதி
தஞ்சாவூர் மாவட்டம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள எம்.ஐ.ஜி காலணி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர் ஆன்லைனில் வரும் ஆர்டர்களை ஸ்விக்கி, சொமோட்டா மூலம் டோர் டெலிவரி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கார்த்திகேயனுக்கு ஒரு நம்பரிலிருந்து போன் வந்துள்ளது. அதில் தான் ஆர்மி ஆபிசர் என அறிமுகப்படுத்தி கொண்டு 20 ஆனியன் தோசை, 10 முட்டை தோசை, 5 பிளேட் தயிர் சாதம், 5 நூடுல்ஸ் , 12 ஆப்பிள் ஜூஸ் ஒரு மணி நேரத்தில் வேணும் என்று ஆர்டர் செய்துள்ளார்.
மேலும் அதற்கான பில் விபரத்தை தனது வாட்ஸ் நம்பருக்கு அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார். கார்த்திகேயனும் உணவு பொருட்களை தயார் செய்து விட்டு அந்த ஆர்மி ஆபிசருக்கு போன் செய்து பணத்தை கொடுத்து விட்டு ஆடர்ரை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார்.
அதற்கு ஆர்மி ஆபிசரோ கையில் பணம் இல்லை என்னுடைய கிரெடிட் கார்டு நம்பரை உங்கள் வாட்சப்புக்கு அனுப்பி இருக்கிறேன். நீங்களும் உங்கள் கிரெடிட் கார்டு நம்பரை எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்புங்கள் பணம் கிரடிட் செய்து விடுகிறேன் என கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கார்த்திகேயன் அந்த நபரிடம் ஏய் பிராடுதானே என கேட்டுள்ளார். உடனே அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, கார்த்திகேயன் நம்பரையும் பிளாக் செய்துள்ளான். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.