×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாரம் ஒரு பிஸ்கட் தூக்கி வீசி.. "பெத்த மனம் பித்து., பிள்ளை மனம் கல்லு" தாய்க்கு மகன்கள் செய்த பெரும் கொடுமை.. கண்ணீர் துயரம்.!

வாரம் ஒரு பிஸ்கட் தூக்கி வீசி.. பெத்த மனம் பித்து., பிள்ளை மனம் கல்லு தாய்க்கு மகன்கள் செய்த பெரும் கொடுமை.. கண்ணீர் துயரம்.!

Advertisement

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வீட்டில் பூட்டி, வாரம் ஒரு முறை மட்டும் பிஸ்கட் வாங்கி கொடுத்ததால் உண்பதற்கு ஏதுவும் இல்லாமல் அவர் மண்ணை உண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி நகரில், ஒரு மூதாட்டி எலும்பும் தோலுமாக ஆடையின்றி மண்ணை உண்ட  காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வந்தது. இதுகுறித்து 1098 உதவி மையத்திற்கு  சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு நேரில் சென்ற சமூகநலத்துறையினர், மூதாட்டி குறித்து விசாரித்த நிலையில், மூதாட்டியின் பெயர் ஞானஜோதி (வயது 62) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர்.

அதில் மூத்த மகன் சென்னையில் காவல் ஆய்வாளராகவும், இளைய மகன் பொதிகை தொலைக்காட்சியிலும்  பணிபுரிந்து வருகின்றனர். அத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவரும், மகளும் இறந்த நிலையில், சொத்து பிரச்சினை காரணமாக மகன்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர். 

இதனால் தனது மனநலம் பாதிக்கப்பட்ட தாயை சரியாக பார்த்துக்கொள்ள இயலாமல் ஒரு வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். அத்துடன் வாரத்திற்கு ஒருமுறை அவரது மகன்கள் வந்து பிஸ்கட்டை கேட் வழியாக தூக்கி வீசிவிட்டு சென்றுவிடுவர் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து நாங்கள் கேட்டால் எங்களிடம் தகராறு செய்வார்கள், எனவே நாங்கள் இதுகுறித்து கேட்பதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

வீட்டிலேயே பூட்டி கிடப்பதால் தண்ணீர், உணவு எதுவும் இல்லாமால் மூதாட்டி மண்ணை உண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், மூதாட்டி மண்ணை உண்ணும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவியதையடுத்து மூதாட்டிக்கு முதல் உதவி வழங்க வேண்டும் எனவும், அவரது இரண்டு மகன்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் சமூகநலத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டிற்குள்ளே இருந்த மூதாட்டியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு வந்த மூத்தமகன் தனது சொத்தையும், தனது பென்சன் பணத்தையம் தம்பி எடுத்துக்கொண்டான் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தாய் பற்றி அவரது அவருக்கு சிறுதும் அக்கறை இல்லாதது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #hospical #grand mother #kaveri street
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story