கஞ்சா குடிக்கியான லிவிங் டுகெதர் காதலன்.. அக்கா - தங்கையாக அருவெறுக்கத்தக்க செயல்.. இறுதியில் கொலை..! பலியான இளம்பெண்.!
கஞ்சா குடிக்கியான லிவிங் டுகெதர் காதலன்.. அக்கா - தங்கையாக அருவெறுக்கத்தக்க செயல்.. இறுதியில் கொலை..! பலியான இளம்பெண்.!
காதலன் லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு பின் கஞ்சா குடிக்கியான நிலையில், பெண் இறுதியில் கயவனின் கைகளால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் வசித்து வருபவர் மஞ்சுளா (வயது 23). இவர் தஞ்சாவூரில் செயல்படும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அறந்தாங்கியை சார்ந்த சந்தோஷ்குமார் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மலரவே, பல இடங்களுக்கு சென்று தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கடந்த 4 மாதத்திற்கு முன் காதல் ஜோடி சென்னைக்கு புறப்பட்டு வந்து, சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அக்கா - தங்கை என கூறி வீடெடுத்து தங்கியுள்ளனர்.
கோயம்பேட்டில் தனியார் கால் சென்டரில் வேலைக்கு சேர்ந்த மஞ்சுளா தினமும் வேலைக்கு சென்று வரும் நிலையில், சந்தோஷ் வீட்டருகே உள்ள நூல் நெசவு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர்களின் உறவு சில மாதங்கள் நன்றாக சென்ற நிலையில், சந்தோஷ் கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளான்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட, வாழ்க்கையில் தவறிழைத்துவிட்டோம் என்று எண்ணிய மஞ்சுளா முன்னாள் காதலருடன் பேச தொடங்கியுள்ளார். இந்த விவகாரம் சந்தோஷுக்கு தெரியவரவே, அவர் மஞ்சுளாவை பலமுறை கண்டித்து அடித்து கொடுமை செய்துள்ளார்.
வேலை பார்த்த வருமானமும் வீட்டிற்கு வராமல் இருக்க, செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த மஞ்சுளாவும் சமைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், முன்தினம் இரவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சந்தோஷ் குமார் சாப்பாடு ஏன் செய்யவில்லை என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறின் போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சந்தோஷ் மஞ்சுளாவின் கழுத்தை கையாலேயே இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் கழுத்தில் துப்பட்டாவை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை போல நாடகமாடியிருக்கிறார்.
காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்து, நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் மஞ்சுளாவின் முகம் மற்றும் கழுத்தில் நாககாயம் இருப்பதை கண்டு சந்தேகித்து விசாரணை செய்தபோது உண்மை அம்பலமானது. இதனையடுத்து, சந்தோஷ் குமாரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
வேலைக்கு சென்ற இடத்தில் கிடைத்த பழக்கத்தை நம்பி லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்த பெண்ணின் இறுதி கதை அவரின் வாழ்க்கையை பார்த்துக்கொள்வான் என்று தேர்வு செய்யப்பட்டவனாலேயே நிகழ்ந்துள்ளது தான் சோகத்தின் உச்சக்கட்டம்.