திருப்பூர் அருகே சாய தொழிற்சாலையில் வெடித்து சிதறிய பாய்லர்கள்.. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.!
திருப்பூர் அருகே சாய தொழிற்சாலையில் வெடித்து சிதறிய பாய்லர்கள்.. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.!
திருப்பூர் மாவட்டத்தில் சாயம் ஏற்றும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததால் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் சாய தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையை சண்முகம் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு அனைத்து விதமான ஆடைகளுக்கும் சாயம் ஏற்றி விற்பனை செய்து வருகிறார்கள். இங்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொழிற்சாலை வழக்கம் போல் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் பயங்கரமான சத்தம் கேட்டதோடு கரு நிற புகையும் அதிக அளவில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் பரிசோதித்த போது அங்கு இருந்த பாய்லர்கள் வெடித்து சிதறின. இதனால் தீயே எனக்கே தொழிலாளர்கள் முயன்றனர் ஆனால் தீ பெருமளவில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். நேற்று அந்தப் பகுதியில் உள்ள மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் பழுது அடைந்ததால் மின்சாரம் இல்லை. இதனால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தொழிற்சாலையில் நேற்று குறைவான அளவிலேயே தொழிலாளர்களும் இருந்ததால் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.