சந்தேகத்தால் காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூரம்... இளைஞர் கைது..!!
சந்தேகத்தால் காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூரம்... இளைஞர் கைது..!!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப்பணித்துறை, பணியாளர் குடியிருப்பில், சந்தோஷ் (32), என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், பவானிசாகர் கூலிங் லைன் பகுதியில் வசித்து வரும், 28 வயதுடைய பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக, வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷும் அந்த பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே அந்தப் பெண் வேறு ஒருவரையும் காதலித்து வந்ததாக கூறுகின்றனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தோஷ், பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த, அவரது நண்பர் காந்தனுடன், அந்த பெண் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவரை வெளியே அழைத்துள்ளார். அங்கு வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தோஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கண்ணம், வலது தோள்பட்டை என்று சரமாரியாக அந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில், சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து, பவானிசாகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சந்தோஷையும் காந்தனையும் கைது செய்தனர்.