தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான 3 மாதங்களில் நடந்த கொடூரம்..! கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட காதல் மனைவி..!

திருமணமான 3 மாதங்களில் நடந்த கொடூரம்..! கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட காதல் மனைவி..!

The brutality that happened in 3 months of marriage..! Love wife found dead in the well..! Advertisement

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்ற வாலிபரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் திருமணம் முடிந்து கடந்த மூன்று மாதங்களாக ஸ்ரீதர் வீட்டிலேயே ராஜேஸ்வரி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு பலத்த சண்டையாக மாறியுள்ளது.

Women Dead

இதனால் மனவேதனையில் இருந்த ராஜேஸ்வரி அடுத்த நாள் காலை வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அவர் வீட்டில் இல்லை என்பதை அறிந்த உறவினர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடி விசாரித்துள்ளனர். இந்நிலையில்தான் போக்கலூர் என்ற இடத்தில் விவசாய கிணற்றில் ராஜேஸ்வரி தனது இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஸ்வரியின் இறப்பு கொலையா அல்லது தற்கொலையா என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Women Dead #Investigation #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story