கொசு பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி... கொசுவத்தி ஏற்றி வைத்து கோரிக்கை விடுத்த கவுன்சிலர்...!!
கொசு பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி... கொசுவத்தி ஏற்றி வைத்து கோரிக்கை விடுத்த கவுன்சிலர்...!!
சாக்கடையால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பெண்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் சூழல் ஏற்படுகிறது என்று கவலை தெரிவித்துள்ளார் கவுன்சிலர் சுனிதா.
தென்காசியில் நகர்மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஒருவர், வார்டு பகுதியில் சாக்கடைகளை சுத்தம் செய்யாததால் கொசுக்கள் உற்பத்தி பெருகி நோய் தொற்று பரவுவதாக குற்றம் சாட்டி கொசுவத்தி ஏற்றி வைத்து நூதன முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
தென்காசி நகராட்சி கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உட்பட அனைத்து கட்சியை சார்ந்த கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
நகராட்சி பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஏழு மன்ற பொருட்கள் வைக்கப்பட்டு விவாதம் செய்யப்பட்டது.
அப்போது 23-வது வார்டு பகுதியை சேர்ந்த பாஜக கவுன்சிலர் சுனிதா அவருடைய வார்டு பகுதியில் சாக்கடைகள் சுத்தம் செய்யபடவில்லை.
இதனால் கொசுக்கள் பெருக்கம் அதிகமாகி பெண்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சாக்கடை சுத்தம் செய்ய வலியுறுத்தி, கொசு பரவலை தடுக்கும் விதமாக நகர்மன்ற கூட்டத்தில் கொசுவத்தி ஏற்றி வைத்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.