×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செவிலியர்கள் பார்த்த பிரசவம்..பிறந்து ஒரு சில நிமிடங்களில் இறந்த பச்சிளம் குழந்தை.!

செவிலியர்கள் பார்த்த பிரசவம்..பிறந்து ஒரு சில நிமிடங்களில் இறந்த பச்சிளம் குழந்தை.!

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் முருகன் - பவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். முருகன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பவானிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் முருகன் மற்றும் அவரது உறவினர்கள் பவானியை அருகில் உள்ள தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 

மேலும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எப்போதும் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்று சொல்லபடுகிறது. இந்நிலையில் பவானிக்கு பிரசவ வலி அதிகமானதால் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து 2 செவிலியர்கள் பவானிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

அதை தொடர்ந்து பவானிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது ஆனால் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை என்று முருகனிடம் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் மற்றும் அவரது உறவினர்கள்  மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதுள்ளார்கள். மேலும் பவானியின் கணவர் முருகன் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த காவல் துறையினர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் பிறந்து 1மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் அப்குதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Delivery seen by the nures #Infant child died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story