சேலையில் ஊஞ்சல் கட்டி மகளை ஆடவைத்து அழகு பார்த்த பெற்றோர்: யாரும் இல்லாத நேரத்தில் நடந்த விபரீதம்..!
சேலையில் ஊஞ்சல் கட்டி மகளை ஆடவைத்து அழகு பார்த்த பெற்றோர்: யாரும் இல்லாத நேரத்தில் நடந்த விபரீதம்..!
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியினரின் மகள் ஜீவபிரீத்தி (10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று காலை வழக்கம் போல் சதீஷ்குமார் வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார்.இதன் பிறகு சரஸ்வதி தனக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரது தாயுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன் காரணமாக வீட்டில் ஜீவபிரீத்தி தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்ட ஜீவபிரீத்,தி சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் கழுத்தை சேலை இறுக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சரஸ்வதி கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக சரஸ்வதி எட்டி பார்த்துள்ளார்.
வீட்டினுள்ளே தனது மகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பாம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.