×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலித்து திருமணம் செய்து கொண்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை.!

காதலித்து திருமணம் செய்து கொண்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை.!

Advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த காளிராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பற்றிய தகவல் காவல் நிலையத்துக்கு சென்றடையவே அங்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சிறுமி திருமணம் செய்து கொண்டதால் அவரது பெற்றோர் சிறுமியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் சிறுமியை விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்‌. பின்னர் குழந்தை திருமணம் செய்த காளிராஜை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சிறுமி மிகுந்த மன வேதனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சிறுமி காப்பகத்தின் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் சிறுமி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Married girl #Sucide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story