பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியர்... வீட்டிலேயே முடங்கி போன மாணவன்.. பெற்றோர் பகிர் குற்றச்சாட்டு..!
பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியர்... வீட்டிலேயே முடங்கி போன மாணவன்.. பெற்றோர் பகிர் குற்றச்சாட்டு..!
மதுரை மாவட்டம் தாடையாம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் நாகராஜ். இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் பிரபு மாணவன் நாகராஜன் காலில் பிறம்பால் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் காலில் பலத்த காயம் அடைந்த மாணவன் வெகு நாட்களாக வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் மாணவன் நாகராஜை மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அறுவை சிகிச்சை முடிந்தும் நாகராஜுக்கு நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாக பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் தனது மகன் நாகராஜின் இந்த நிலைமைக்கு காரணமான தலைமை ஆசிரியர் பிரபுவை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று மதுரை ஆட்சியரிடம் மாணவனின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்