எமன் ரூபத்தில் வந்து காவு வாங்கிய லாரி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!
எமன் ரூபத்தில் வந்து காவு வாங்கிய லாரி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!
வேலூர் கஸ்பா ஆர்.என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாம் பாஷா. இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சதாம் பாஷா அதிகாலை சத்துவாசாரியை அடுத்த ரங்காபுரம் அணுகு சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சதாம் பாஷா தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது அதிவேகமாக மோதியது. இதில் சதாம் பாஷா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சதாம் பாஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சதாம் பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.