ஓ.. மதுபானக் கடைகளை திறப்பதற்கு இதுதான் காரணமா! தமிழக அரசு விளக்கம்!
The reasin behind openning tasmac
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தற்போது வரும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறை ஒருசில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிறுகுறு தொழில்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.
தற்போது அடுத்தகட்டமாக 40 நாட்களாக மூடப்பட்டிருக்கும் மதுபானக் கடைகள் வரும் மே 7 ஆம் தேதி வரை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக அரசு, பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் தமிழக எல்லை மாவட்டங்களில் உள்ளவர்கள் அதிகமாக வெளி மாநிலங்களுக்கு மது வாங்குவதற்காக செல்ல துவங்கிவிட்டனர்.
மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டம் அதிகரித்தால் கொரோனா அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வரவே தமிழகத்திலும் வரும் மே 7 முதல் மதுபானக் கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.