குடிநீர் தொட்டியில் கிடந்த அழுகிய உடல்... குடிநீரில் துர்நாற்றம் வீசியதால்... அதிர்ச்சியில் கிராம மக்கள்...!
குடிநீர் தொட்டியில் கிடந்த அழுகிய உடல்... குடிநீரில் துர்நாற்றம் வீசியதால்... அதிர்ச்சியில் கிராம மக்கள்...!
குடிநீர் தொட்டியில் அழகிய நிலையில் கிடந்த உடல். அதிர்ச்சியில் குடிநீரை பயன்படுத்திய கிராம மக்கள்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கரன் இவரது மகன் சரவணகுமார் (37). இவர் ஒரு இன்ஜினியர்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சரவணகுமார் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு திரும்பி வராததால், சரவணக்குமாரின் குடும்பத்தினர் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் வந்த குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷிடம் புகார் கூறினார். எனவே நேற்று முன்தினம் ஊராட்சி ஊழியர்கள், மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் ஏறி சுத்தம் செய்வதற்காக பாய்ந்தனர்.
அப்போது தொட்டிக்குள் சரவணகுமாரின் அழுகிய உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சரவணகுமார் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சரவணகுமாரை யாராவது கொலை செய்து, அவரது உடலை குடிநீர் தொட்டியில் போட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணகுமாரின் உடல் அழுகிய நிலையில் கிடந்த குடிநீரை பயன்படுத்திய மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குடிநீரை பயன்படுத்திய மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.