காதலன் கண்ணெதிரே காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்... விழுப்புரம் அருகே பரபரப்பு..!
காதலன் கண்ணெதிரே காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்... விழுப்புரம் அருகே பரபரப்பு..!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும் ஐய்யங்கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த சிறுவனும் சிறுமியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்கிரவாண்டி அருகே உள்ள செங்கமேடு ஏரி கரைக்கு சென்று தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை பறித்துக் கொண்டனர்.
மேலும் மர்ம கும்பல் அந்த சிறுவனை கத்தியால் குத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த சிறுமியையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து இவர்களின் அலரல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.