குரூப் ஸ்டடியில் கூத்தடித்த மாணவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் பெற்றோர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
குரூப் ஸ்டடியில் கூத்தடித்த மாணவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் பெற்றோர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
சென்னை பெரவள்ளூரில் வசித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் பெரம்பூரில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மாணவி மிகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் மாணவியை அழைத்துக் கொண்டு எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி 3 மாத கால கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 11ம் வகுப்பு மாணவன் தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் இருவரும் குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஒன்றாக சேர்ந்து படிப்பதாக கூறி மாணவனும் மாணவியும் அடிக்கடி தனிமையில் உடலுறவு வைத்துக் கொண்டதன் காரணமாக மாணவி தற்போது கர்ப்பமாகியுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.