திருட வந்த இடத்தில் மூதாட்டியை அடித்து கொலை செய்த திருடர்கள்... இதுதான் காரணம்...!!
திருட வந்த இடத்தில் மூதாட்டியை அடித்து கொலை செய்த திருடர்கள்... இதுதான் காரணம்...!!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தில் வசிப்பவர் வள்ளியம்மாள்(82).
வள்ளியம்மாளின் கணவர் மாணிக்கம் 5 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது மகன் கஜேந்திரன், உதவி காவல் ஆய்வாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்று குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கிராமத்தில் இருக்கும் வீட்டில் வள்ளியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் மூதாட்டி வள்ளியம்மாள் வீடு பூட்டி இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அபாபோது வள்ளியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த ஆர்கேபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டி வள்ளியம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் வினோத்குமார், சதீஷ் ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்ததால். அவரது கழுத்தில் நெக்லஸ் கைகளில் வளையல், கம்மல். மூக்குத்து போன்ற ஆபரணங்கள் அணிந்திருப்பதை நோட்டமிட்டு இரவு நேரத்தில் வீட்டில் புகுந்தோம். ஆனால் நகைகள் அனைத்தும் கவரிங் என்று தெரிந்ததால் ஆத்திரத்தில் மூதாட்டி தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தோம்.
மேலும் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு சென்றோம் என்று கூறினர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.