கல்லூரி உதவி பேராசிரியர் விடுதியில் எடுத்த விபரீத முடிவு.. போலிஸார் விசாரணை.!
கல்லூரி உதவி பேராசிரியர் விடுதியில் எடுத்த விபரீத முடிவு.. போலிஸார் விசாரணை.!
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜேக்கப் என்பவர் சுவேதா பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நண்பர்களோடு கொடைக்கானல் செல்வதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஜேக்கப் கொடைக்கானல் செல்லாமல் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஒரு அறை எடுத்து அங்கு தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அடுத்த நாள் காலை நீண்ட நேரம் ஆனபின்னும் ஜேக்கப் தங்கிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த தனியார் விடுதி நிர்வாகிகள் திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஜேக்கப் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஜேக்கப் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கியுள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் ஜேக்கப் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.